E. பிரியா



என்னை திருமணம் செய்பவர் என்னுடைய திருநங்கை தோழிகளை மதிப்பவராக இருக்கவேண்டும். என்னை உடலளவில் விரும்பாமல் என் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து என் மனதை விரும்புபவராக இருக்கவேண்டும். எனக்கு இதுவரை கிடைக்காத அன்பை, அரவணைப்பை தருபவராக இருக்கவேண்டும்.
என்னுடைய பணத்தையும், பொருளையும் விரும்பாத ஒரு ஆண்மகனாக இருக்கவேண்டும். என்னைவிட அழகாகவும் மற்றும் பணம் பொருளில் அதிகமாக இருக்கும் திருநங்கையை கண்டவுடன் மனம்மாறி ஓடக்கூடாது. எனக்கு படிக்கும் ஆசை உள்ளது. பிற்காலத்தில் அதற்கு தடையாக இருக்கக்கூடாது. பிறரிடம் என்னை மனைவி என்று அறிமுகப்படுத்த தயங்கக்கூடாது. எங்கும் என்னை அழைத்துச்செல்ல தயங்கக்கூடாது. நல்ல வேலையில் இருப்பவராக, பொறுப்பானவராக இருக்கவேண்டும். உடையிலும், பேச்சிலும் நவநாகரிகம் உடையவராக இருக்கவேண்டும். 21-25 வயதுள்ளவராக இருக்கவேண்டும். என்னைவிட உயரமானவராகவோ அல்லது என் உயரத்திலோ இருக்கவேண்டும். நல்ல உடற்கட்டுடன் இருக்கவேண்டும். மீசையுள்ளவராக இருக்கவேண்டும். அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என்னைப்பற்றி

என் உயரம் 5 அடி 8 அங்குலம். மாநிறம். சென்னையில் வசிக்கிறேன். ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை தொடரமுடியவில்லை. தாய்தந்தை அரவணைப்பு இல்லாத காரணத்தால் சகதோழிகளுடன் வசித்துவருகிறேன். முன்பு பாலியல் தொழில் செய்துவந்தேண். தற்போது பல ஹெச்.ஐ.வி தொண்டு நிறுவனங்களில் ஆலோசகராகவும், பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றிவருகிறேன். தமிழ் மற்றும் கன்னடம் பேசுவேன். ஆங்கிலம் ஓரளவு தெரியும். மாடலிங்கில் விருப்பம் உள்ளது.
Read more

தீபிகா



திருநங்கைகளை புரிந்துகொள்பவராக இருக்கவேண்டும். எங்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும். எனது சம்பாத்தியத்தில் வாழவிரும்பாதவராக இருக்கவேண்டும். வாழ்நாள் இறுதிவரை என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்புகொடுப்பவராக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்கு என்னை அழைத்துச்செல்ல தயங்கக்கூடாது. என்னை அனைவருக்கும் மனைவி என்று அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு ஆண்மகனாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையில் இருப்பவராக வேண்டும். ஓரளவு படித்தவராக இருக்கவேண்டும். அவரின் உடைகளும், பேச்சும் நவநாகரீகமாக இருக்கவேண்டும். 25-30 வயதுடையவராக இருக்கவேண்டும். மீசை இருக்கவேண்டும். குண்டாக இருக்கக்கூடாது. என்னைவிட அழகான திருநங்கையை சகோதரியாக நினைக்கவேண்டும். என்னைவிட உயரமானவராக இருக்கவேண்டும். மனிதநேயம் மிக்கவராக இருக்கவேண்டும். என் பிறந்த வீட்டில் கிடைக்காத அன்பு, பாசம், அரவணைப்பு அவரிடம் கிடைக்கவேண்டும்.ப்பமில்லை. அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என் உயரம் 5 அடி 7 அங்குலம். மாநிறம். பூர்விகம் புதுச்சேரி. பிறந்த்து, வளர்ந்தது சென்னை. தற்போது திருநங்கைகளுடன் வசிக்கிறேன். ப்ளஸ் டூ வரை படிப்பு. தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை செய்கிறேன். உ படிக்க ஆசை. சமையல் நன்றாக செய்வேன். மா.டலிங் செய்ய ஆசை. தாய்மொழி தமிழ். ஆங்கிலம் ஓரளவு தெரியும்.
Read more

செளமியா



என்னுடைய வாழ்க்கை துணைவர் நல்லவராக இருக்கவேண்டும். குறிப்பாக அன்புகாட்டி என் மனதில் ஆசைகளை விதைத்துவிட்டு ஏமாற்றுபவராக இருக்கக்கூடாது. திருநங்கைகளை மதிப்பவராக இருக்கவேண்டும்.

மற்ற திருநங்கைகள் மேல் காதல்கொள்பவராக இருக்கக்கூடாது. அவர் உழைப்பாளியாகவும், குடும்பபொறுப்புமிக்கவராகவும் இருக்கவேண்டும். படித்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை ஆனால் இனிமையான நடத்தை, பேச்சுடன் இயல்பானவராக இருக்கவேண்டும். சென்னைவாசியாக இருந்தால் மிகவும் மகிழ்வேன். ஏனென்றால் என் குடும்பத்தைவிட்டு வேறு ஊரில் சென்று வாழ எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என்னைப்பற்றி:
175 சென்டிமீட்டர் உயரம். தமிழ் பெண்களின் நிறம். சென்னையில் வசிக்கிறேன். பாலியல் சிறுபான்மையினருக்கான தொண்டு அமைப்புகளில் வேலை செய்கிறேன். என் சம்பாத்தியத்தின் மூலம் என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். அதிகம் படிக்கவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆசை. தாய்மொழி தமிழ். தமிழிலும், ஹிந்தியிலும் சரளமாக பேசுவேன்.
Read more

தேன்மொழி


என்னுடைய வாழ்க்கை துணைவர் வீரம் மிக்கவராக இருக்கவேண்டும். நல்ல குணமுடைய அன்பானவராகவும், நேர்மையானவராகவும் இருக்கவேண்டும். படித்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் புத்திசாலியாக இருக்கவேண்டும்.

என்னைப்பற்றி:

நான் சென்னையில் வசிக்கிறேன். 5 அடி 6 அங்குலம். சற்றுப்பூசினாற்போல உடல்வாகு. தாய்மொழி தமிழ். கன்னடம் மற்றும் ஹிந்தி பேசுவேன். தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறேன். நாட்டுப்புற கலைகள் பற்றிய அறிவு உண்டு. கலைநிகழ்ச்சிகளில் தப்பாட்டம் ஆடுவதுண்டு. தற்போது ‘சகோதரி’யில் தன்னார்வத்தொண்டராகவும், நடன நாடகக்கலைஞராகவும் இருக்கிறேன்.அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com
Read more